மட்டு முதல்வர் - ஆளுநர் சந்திப்பு

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்க்கும் இடையே நேற்று (17) சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக பேசப்பட்டதுடன், மட்டு. நகரில் மழை காலங்களில் பூரண வடிகான் வசதிகள் இல்லாமையால் மக்களின் அசௌகரிய நிலைமை குறித்தும், அதற்கு தீர்வாக வடிகான்கள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

No comments