கிழக்கு தேர்தல் களத்தில் மனோவும்?


நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் களமிறங்கவுள்ளதென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கைக்கமையவே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் கொழும்பு, கம்பஹா மற்றும் மலையகத்தில் போட்டியிடுவது தொடர்பாக பரீசிலிக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ஏனைய கட்சிகளின்  தமிழ் அரசியல்வாதிகள் வெவ்வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மனோ கணேசனும் வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் பொதுதேர்தலின்போது களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments