சமூக வலைத்தள வாசிகளுக்கு அதிர்ச்சி தகவல்

சமூக ஊடகங்களில் அவதூறான பதிவுகள் மற்றும் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்தவும், இன மற்றும் மத ரீதியாக வெறுப்பை ஏற்படுத்தும் முக்கியமான பதிவுகளை உடனடியாக அகற்றுவதற்கும் ஒரு பொறிமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்து வரும் சைபர் குற்றங்களுக்கு தீர்வு காண தேசிய சைபர் பாதுகாப்பு வியூகத்தின் கீழ் புதிய சட்ட கட்டமைப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு என்ற பிரிவு இந்த சட்ட வரைபை மேற்கொண்டுள்ளது.

No comments