மகளுக்கு எமனான தந்தையின் குடி

நுவரெலியா – திம்புள்ள பத்தனை பொலிஸ்பிரிவு, மேபில்ட் சாமஸ்பிரிவில் நேற்று (23) யுவதி ஒருவர் தான் அணிந்திருந்த சால்வாரின் சோலினை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட யுவதியின் தந்தை தினந்தோரும் மது அருந்திவிட்டு வந்து தனது மகளிடம் சண்டைப்பிடிப்பதாகவும் நேற்று இரவும் மதுபானம் அருந்திட்டு வந்து தனது மகளிடம் கடுமையான முறையில் சன்டைபிடித்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் எனது தந்தை மது மருந்தி விட்டு வந்து மோசமான முறையில் சண்டை பிடிக்கிறார். “எனது மரணத்துக்கு என் தந்தையே காரனம்” எனவே தான் தற்கொலை செய்து கொள்வதாக குறித்த யுவதி கைப்பட எழுத்திய கடிதத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட யுவதி ராஜதுறை நவலெட்சுமி (24) என அடையாளம் கானப்பட்டுள்ளார்.

No comments