பிரபல ஊடகவியலாளர் ஜிப்ரி காலமானார்

இலங்கையின் பிரபல அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (20) இரவு தனது 60வது வயதில் காலமானார்.
அண்மையில் அறிவிப்புத்துறையில் இருந்து ஓய்வு பெற்ற அவர் சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று மரணித்துள்ளார்.
அம்பாறை – கல்முனையை சேர்ந்த இவர் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி பயின்று, குண்டசாலை விவசாயக் கல்லூரியில் டிப்ளோமா பெற்ற புகழ்பெற்ற விஞ்ஞானப் பாட ஆசிரியரானார். தொடர்ந்து களுத்துளை ஜீலான் மத்திய கல்லூரி, தொடவத்தை அல் பஹ்ரியா பாடசாலை ஆகியவற்றில் அதிபராகவும் கடைமயாற்றினார்.
நாடுதழுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பத்து அதிபர்களில் இவரும் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் அறிவிப்பாளராகிய ஜிப்ரி இலங்கை வானொலியில் அல்லியின் ஹலோ உங்கள் விருப்பம், பாஹிமின் பரவசப் பயணம், அறிவுக் களஞ்சியம் போன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக நேயர்களின் விருப்பத்துக்குரிய அறிவிப்பாளராக திகழ்ந்தார்.

No comments