கூட்டமைப்பு திருந்தியதாக நடிக்கின்றது?


ஏதோவொரு வகையில் தங்கள் மத்தியில் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதற்காகவே சி.வி.விக்னேஸ்வரன் வந்தால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பலமான சக்தியாகத் திகழுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.ஆனாலும் தமிழ்மக்கள் இவ்வாறான ஆழமில்லாத மெலோட்டமான கருத்துக்களுக்கு இனியும் எடுபடமாட்டார்களென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தமிழ்த்தேசியக் கொள்கைகளிருந்து முற்றுமுழுதாக விலகியிருக்கிறார்கள் என்பதைத் தமிழ்மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ள சூழலில் எதிர்வரும் தேர்தல்களில் கூட்டமைப்புத் தற்போதைய வடிவத்துடன் தமிழ்மக்கள் மத்தியில் வாக்கு கேட்டுச் செல்ல முடியாது.இதனை விளங்கிக் கொண்டு சி.வி.விக்னேஸ்வரன் வந்தால் பலமான சக்தியாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு திகழுமென ரெலோவின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.

எங்களைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளும் தோல்வியடைந்தமையால் இனி ஒன்றுசேர்ந்து செயற்பட்டால் தான் பலமாகச் செயற்பட முடியுமென்ற அடிப்படையில் தான் செல்வம் அடைக்கலநாதன் இதுபோன்றதொரு கருத்தைக் கூறியுள்ளார்.

எங்களுடைய மக்கள் கடந்த பத்து வருடமாக நடைபெற்று வரும் அரசியலைச் சரிவர விளங்கிக் கொள்வார்கள். தமிழ்த்தேசிய அரசியலைத் தொடர்ந்தும் தக்க வைக்க வேண்டுமாயின்  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு எங்கள் மக்கள் ஆதரவு வழங்க வேண்டுமெனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  வலியுறுத்தியுள்ளார்.

No comments