நாகர்கோவிலில் கைதானவர்களிற்கு பிணை?


கடந்த தைப்பொங்கல் தினத்தன்று வடமராட்சி கிழக்கின் நாகர்கோவில் பகுதியில் இலங்கை இராணுவத்திற்கும் ஊர் இளைஞர்கள் சிலருக்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட எண்மரும் யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 29ம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் அவர்கள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிணை கோரி விண்ணப்பித்திருந்தார்.

இதனிடையே சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிணை கோரிய போதும் முக்கிய சந்தேகநபர் தலைமறைவாக இருப்பதாக தெரிவித்து காவல்துறை பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதன் பின்னராக நீண்ட வாதத்தின் பிற்பாடு 08 பேருக்கும் பிணைவழங்கப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் தரப்பு தெரிவித்துள்ளது.

No comments