'குறுக்கீடு' செய்தால் தூதரை வெளியேற்றுவோம்! பிரித்தானியாவோடு மல்லுக்கட்டும் ஈரான்;


கடந்த வாரம் உக்ரேனிய விமானத்தை வீழ்த்தியதில் கொல்லப்பட்டவர்களுக்காக நடத்திய நினைவேந்தலில் கலந்துகொண்ட  பிரிட்டனின் தூதரான ராப் மெக்கா ஈரான்அரசால் கைதுசெய்து விடுதலையாகியுள்ள நிலையில்

 மேலும் தமது உள்விவகாரங்களில் "குறுக்கீடு" செய்தால்  பிரிட்டனின் தூதரை வெளியேற்ற முடியும் என்று ஈரான் திங்களன்று எச்சரித்துள்ளது.

ஈரான் "பிரிட்டிஷ் தூதரகத்தின் அனைத்து தலையீடுகள் மற்றும் தங்களை கோபமூட்டும் செயல்களை  உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 பிரிட்டனின் தூதர் ராப் மெக்கெய்ர் கைது செய்யப்பட்டதற்கு  லண்டனில் உள்ள ஈரானின் தூதரை வரவழைத்து "கடுமையான கண்டனத்தை " தெரிவிக்க பிரித்தானியாவின்  வெளியுறவுத்துறை  தெரிவித்துள்ள நிலையில்  சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வந்தது.


No comments