இணையத்தில் வைரலாகி வலம்வரும் முத்துக்குமார் மகனின் கவிதைகள்!

தங்க மீன்கள், சைவம் ஆகிய படங்களில் பாடல் எழுதியதற்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற கவிஞர் நா.முத்துக்குமார், மாநில விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

சுமார் 1,500 திரைப்பட பாடல்கள் மட்டுல்லாது தூசிகள், நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன், போன்ற பல கவிதை தொகுப்புகளையும், சில்க்சிட்டி என்ற நாவலையும் எழுதியுள்ளார்.

இந்நிலையில் தனது 41-வது வயதில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கட்டிருந்த நா.முத்துக்குமார் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி உயிரிழந்தார். இது தமிழ் தமிழ் நலன் விரும்பிகளையும் திரை உலகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 தற்போது அவரது மகன் ஆதவன் பொங்கலுக்கு எழுதிய கவிதைகள் என்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

No comments