கஞ்சா மீட்பு; ஒருவர் கைது

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் உள்ள தாளையடிப் பகுதியில் வீடொன்றில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மதுவரித் திணைக்களத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அங்கு சென்ற மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.
இதன்போது, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 கிலோ எடையுடைய கேரளா கஞ்சா மீட்கப்பட்ட அதேநேரத்தில் குறித்த வீட்டிலிருந்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஏனையவர்கள் தப்பியோடியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments