பங்களாதேஷ் செல்ல தயாராகிறார் டக்கி

நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டத்தை இலங்கையில் அபிவிருத்தி செய்வதற்கு, பங்களாதேஷ் அரசாங்கத்தின் அனுபவத்தையும் உதவிகளையும் வரவேற்பதாகவும் குறுகிய காலத்தில் நன்னீர் மீன் வளர்ப்பில் அபிவிருத்தியடைந்த பங்களாதேஷின் செயற்பாடுகளை நேரில் கண்டறிவதற்காக, விரைவில் பங்களாதேஷுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சுக்கு, இன்று (10) வருகைதந்த பங்களாதேஷின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் றியாஷ் ஹாமிதுல்லாவுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போதே, அமைச்சரால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments