800 குஞ்சுகளுக்குத் தந்தையானது 100 வயது ஆமை!

பசிபிக் பெருங்கடல் அமைந்துள்ள ஈகுவடார் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள கலபாகோஸ் செலோனாய்டிஸ் கூடன்சிஸ் என்ற இராட்சத ஆமை இனம்
அழிந்து வருகின்றது. இந்த ஆமை இனத்தைக் காப்பாற்ற சுற்றுச்சூழல் அதிகாரிகள் முடிவு செய்தனர். இனப் பெருக்கம் மூலம் இந்த ஆமை இனத்தைக் காப்பாற்றலாம் என நமப்பினர்.

இதற்கா 3 ஆண் ஆமைகளையும் 12 பெண் ஆமைகளையும் தேர்வு செய்தனர். 3 ஆண் ஆமைகளில் ஒரு ஆண் ஆமையின் வயது 100. 40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆமையை அமொிக்காவின் கலிபோனியா மாகாணம் சான் டியாகோ மிருகக்காட்சி சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட ‘டியாகோ‘ என்ற ஆமை ஆகும். அப்போதே அதன் வயது 60.

கலபாகோஸ் தீவில், 3 ஆண் ஆமைகளையும், 12 பெண் ஆமைகளையும் அடைத்து வைத்து இனப்பெருக்கம் செய்யப்பட்டது. இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது. தற்போது, அங்கு 2 ஆயிரம் ஆமைகள் நடமாடுகின்றன. அவற்றில் 800 ஆமைகளுக்கு ‘டியாகோ’ ஆமைதான் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

‘டியாகோ‘ பிறப்பிடமான எஸ்பனோலா தீவில் உள்ள காட்டுக்கே அதை அனுப்பி விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வருகிற மார்ச் மாதம், ‘டியாகோ‘ அங்கு விடப்படுகிறது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

No comments