மேலுமோரு காவல்துறையினர் மரணம்?


மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இன்னுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர், டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (13) உயிரிழந்துள்ளார்.
மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி விடுமுறையில் சென்ற அநுராதபுரம் – தளாவப் பகுதியை சேர்ந்த எஸ்.ரத்னாயக்க (வயது 28) என்ற பொலிஸ் அதிகாரியே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதற்கு முன்னர், மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மதவாச்சி – ஹெத்தாகடஹெட்ட, வீரகொல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பி.சீ.பியரத்தின (வய 45) என்பவர், ஞாயிற்றுக்கிழமை (12) உயிரிழந்தார்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற மேலும் 4 பொலிஸ் அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments