கிளிநொச்சி கோர விபத்தில்; இருவர் பலி

கிளிநொச்சி – கனகபுரம் வீதியில் இன்று அதிகாலை 4 மணிக்கு பாரவூர்தி – மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்த வரதராஜா ஜெமினன் (23-வயது), யாழ்ப்பாணம் செட்டியார் மடம் அராலி மேற்கைச் சேர்ந்த செல்வநாயகம் அஜிந்தன் (29-வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பாரவூர்தியின்  சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன். விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments