அதிகாலை தரை இறங்கிய விமானத்தில் இருவர் மரணம்

சவுதி அரேபியாவின் ஜித்தா நகரிலிருந்து இந்தோனேசியாவின் சுரபாயவை நோக்கி பயணித்த தாய்லாந்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் இன்று (13) அதிகாலை 2.45 அளவில் குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்த பயணிகள் இருவர் சுகயீனம் அடைந்துள்ளதாக தெரிவித்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்ட்டுள்ளது.
சுகயீனமுற்றிருந்த 74 வயதுடைய பெண் மற்றும் 64 வயதுடைய ஆண் உள்ளிட்ட இரு பயணிகளையும் வைத்தியர்கள் பரிசோதிக்க முன்னரே அவர்கள் உயிரிந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மற்றுமொரு பயணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments