சிறுவனை துஷ்பிரயோகம் செய்தவருக்கு கடும் தண்டனை

16 வயது சிறுவன் ஒருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட வியாபாரி ஒருவருக்கு 30 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் இன்று (13) தீர்ப்பளித்துள்ளார்.
கிருளப்பனை பூர்வாராம பகுதியை சேர்ந்த நபருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 06 இலட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, அதனை செலுத்த தவறினால் மேலும் 06 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதனை செலுத்தாவிட்டால் மேலும் 18 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று தீர்ப்பளித்தார்.

No comments