தமிழில் வழக்காட அரசியல் கைதிக்கு அனுமதி

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவர் தனக்கு தானே தமிழ் மொழியில் வாதாடுவதற்கு கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2008ம் ஆண்டு கொட்டாஞ்சேனையில் 6 கைக் குண்டுகளை தம்வசம் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் கனகசபை தேவதாசன் (63) என்பர் கைது செய்யப்பட்டார்.

2018ம் ஆண்டு நவம்பர் 7ம் திகதி அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது.

தீர்ப்பினை எதிர்த்து கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்த தேவதாசன் அவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்ற போது தானே வழக்காடுவதாகவும், தமிழ் மொழியிலேயே வழக்கினை நெறிப்படுத்த வேண்டும் என்றும் விண்ணப்பமும் செய்திருந்தார்

இந்நிலையில் கடந்த 13ம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அதற்கு அனுமதியளித்த நீதிபதி, வழக்கை மார்ச் 30ம் திகதிக்கு ஒத்தவைத்தார்.

No comments