குணமடைந்தார் சீன பெண்

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனப் பெண் முழுமையாக குணமடைந்துவிட்டார் என்று தேசிய தொற்று நோய் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 25ம் திகதி அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 43 வயதுடைய சீன பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று முன் தினம் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் ஆபத்தற்ற நிலையில் காணப்பட்ட அவர் சிகிச்சைகளை தொடர்ந்து முழுமையாக குணமடைந்து விட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments