கேற்றிலுக்குள் தலையை விட்ட எடுக்க முடியாது தவித்த குழந்தை!

தேனீருக்காக சுடுநீர் வைக்கும் கேற்றில் ( kettle) உள்ளே இரண்டு வயதுக் குழந்தையின் தலை சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை விளையாடிக்கொண்டிருக்கும் போது வெறுமையாக இருந்த கேற்றிலுக்குள் தலையை விட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தலையை வெளியே எடுக்க முடியாத குழந்தை அழவே குழந்தையின் பெற்றோருக்கு விடயம் தொியவந்தது.

பெற்றோர்களின் முயற்சி கைகூடாததனால் தீயணைப்பு வீரர்களுக்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் கேற்றிலை வெட்டி குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளது.

No comments