உயிர் பாதுகாப்பு வழங்கினால் சரண்?


படையினரால் தேடப்பட்டுவரும் முன்னாள் போராளிக்கான உயிர்பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டால் சரணடைய தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணியால் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் பகுதியில் படையினரை தாக்கியதாக தேடப்படும் முன்னாள் போராளி தொடர்பிலேயே பாதுகாப்பு உத்தரவாதம் கோரப்பட்டுள்ளது.  

யாழ்ப்பாணம் - நாகர்கோவில் பகுதியில், புதன்கிழமை (15) அப்பகுதி இளைஞர் ஒருவருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, இராணுவ வீரர் ஒருவரை குறித்த இளைஞர் தாக்கியுள்ளார்.

அதையடுத்து, இராணுவ வீரரைத் தாக்கிய இளைஞனை தேடி, மறுநாள் (16) அதிகாலை இராணுவத்தினர்  சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

எனினும், குறித்த இளைஞர் தலைமறைவான நிலையில், அவ்விளைஞரின் நண்பர்களான நான்கு இளைஞர்களை இராணுவத்தினர் கைதுசெய்து, பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ச்சியாக கைதுகளை முன்னெடுத்துவரும் நிலையில் தலைமறைவாகியுள்ள முன்னாள் போராளி சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.  

No comments