வலம்புரி செய்தி ஆசிரியர் வீட்டின் மீது தாக்குதல்?


யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழது செய்தி ஆசிரியர் கரனின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் உள்ள அவரது வீட்டின் மீதே, இனந்தெரியாத நபர்கள், இன்று இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 5க்கும் மேற்பட்டவர்கள் சைக்கிளில் சென்று வீட்டின் நுழைவாயில் கதவு மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக இதே ஊடகவியலாளரது வீட்டின் முன்பதாக அமைந்திருந்த மற்றொரு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன் ஊடகவியலாளர் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து முன்னால் வசித்து வந்திருந்த குடும்பம் அங்கிருந்து இடம்பெயர்ந்ததையடுத்து மீண்டும் ஊடகவியலாளர் வீடு தாக்கப்பட்டுள்ளது.

No comments