மீண்டும் போராட்ட சொத்துக்களை தேடும் கும்பல்கள்!


விடுதலைப்புலிகளது தாயகத்தில் உரிமை கோரப்படாதிருக்கின்ற சொத்துக்களை  சுவீகரிக்க புலம்பெயர் தேசத்திலிருந்து சிலர் மேற்கொண்ட சதிகளை இலங்கை அரச புலனாய்வுப்பிரிவு கண்டுபிடித்துள்ளது.

யுத்த முடிவின் பின்னராக தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் காணப்பட்ட விடுதலைப்புலிகளது சொத்துக்களை சுவீகரித்து தற்போது உலக பணக்காரர்கள் இடத்தில் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய இருந்து வருவது தெரிந்ததே.

மறுபுறம் இறுதி யுத்தத்தின் போது கைவிடப்பட்ட தங்க நகைகளை சூறையாடியதுடன் பின்னராக வன்னிக்கு வெளியே கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரையென பினாமிகளிடமிருந்த சொத்துக்களை   கோத்தபாய பறித்தும் கொண்டார்.

இந்நிலையில் மீண்டும் ஜனாதிபதியாக ஆட்சிக்கதிரையேறியுள்ள கோத்தபாய இன்னமும் அடையாளங்காணப்படமுடியாத சொத்துக்களில் கண் வைத்துள்ளார்.

இதனிடையே விடுதலைப்புலிகளது நிர்வாகசேவைப்பொறுப்பாளராக இருந்த மலரவன் எனப்படும் போராளியின் பெயரில் வவுனியாவிலும்,மலேசியாவிலும் இருக்கின்ற சொத்துக்களை எடுத்துக்கொள்ள சுவிஸ் மற்றும் பிரான்சிலிருந்து சிலர் முயற்சித்தமை அம்பலமாகியுள்ளது.குறிப்பாக உள்ளுரிலுள்ள சிலரை இதற்காக அவர்கள் அணுகியிருந்த நிலையில் உண்மை வெளிப்பட்டுள்ளது.

இது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் கிளிநொச்சி பாரதிபுரத்திலுள்ள சில வீடுகளில் விசாரணைகளை நடத்தியுள்ளனர். 

குறிப்பாக நாட்டை விட்டு வெளியேறி சுவிஸில் அடைக்கலம் கோரிய மலரவனின் மனைவியின் மூலம் பெற்றுக்கொண்ட தகவல்களை வைத்தே பினாமிகள் வசமுள்ள சொத்துக்களை பறித்தெடுக்க இக்கும்பல் முற்பட்டுள்ளது.

இக்கும்பலில் மலரவனின் மனைவி மற்றும் அவரது சகோதரி போன்றவர்கள் தொடர்புபட்டிருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதே தரப்பு புலம்பெயர் தேசத்திலுள்ள புலிகளது சொத்திற்கு முட்டிமோதுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் தாயகத்தில் உள்ள சொத்துக்களை தற்போது இலக்கு வைத்துள்ளது.

வன்னியில் அடிக்கடி இடம்பெறும் புதையல் அகழ்வுகளின் பின்னணியில் இக்கும்பலும் தொடர்புபட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது,

No comments