ரஞ்சனால் அமீனின் பிபிசி ஒப்பந்தம் பறிபோனது

ரஞ்சன் ராமநாயக்க எம்பியுடன் உரையாடிய ஊடகவியலாளர் அசாம் அமீனின் குரல் பதிவு வெளியானதை அடுத்து அவருடனான ஒப்பந்தத்தை பிபிசி உலகச் சேவை இடை நிறுத்தியுள்ளது.
நீதித்துறை, பொலிஸ், அரசியல்வாதிகள் மற்றும் சினிமாத்துறையில் இருப்போருடன் ரஞ்சன் ராமநாயக்க பேசிய சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் வெளியானது.
அந்தவரிசையில் அசாம் அமீனுடன் பேசிய குரல் பதிவும் வெளியானது, அதில் “சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரம் தொடர்பிலும், தேரர்கள் தொடர்பிலும் சர்ச்சைக்குரிய முறையில்” இருவரும் பேசியுள்ளனர்.
இந்நிலையிலேயே பிபிசி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எனினும் அதனை மறுத்துள்ள அசாம் அமீன் தான் முன்னதாக ஜனவரி 1ம் திகதி தனது பதவி விலகல் கடித்ததை பிபிசிக்கு அனுப்பியிருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், குரல் பதிவு வெளியான பின்னர் தன்னை தொடர்பு கொண்ட பிபிசி தமது ஒப்பந்தத்தை தொடர முடியாது எனத் தெரிவித்தது, “பதவி விலகல் முடிவை முன்னரே எடுத்திருந்ததால் இதில் ஆச்சரியமில்லை” என கூறியதாகவும் அமீன் தெரிவித்தார்.

No comments