136 பேர் கைது:மூவர் கனேடிய தமிழர்?


செல்லுபடியான வீசா இன்றி தங்கியிருந்த மூவர் யாழில் கைதாகியுள்ளனர்.இதேவேளை இலங்கை முழுவதிலுமாக தங்கியிருந்த 136 வெளிநாட்டு பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புக்கு அமைய செல்லுபடியான வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகளை கைதுசெய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (05) இரவு 10 மணி முதல் இன்று (06) காலை 06 மணிவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியர்கள் 82 பேர், பாகிஸ்தானியர்கள் 12 பேர், மாலைத்தீவு பிரஜைகள் 10 பேர், நைஜீரியர்கள் 08 பேர், பங்களாதேஷ் பிரஜைகள் 06 பேர், 04 சீன பிரஜைகள், 04 கனேடிய பிரஜைகள், 02 தாய்லாந்து பிரஜைகள், 02 சுவிட்சர்லாந்து பிரஜைகள் இதன்போது, கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அமெரிக்கா, கட்டார், சுவீடன், ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், கொரியா ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒவ்வொரு பிரஜைகளும் கைதுசெய்யப்பட்டவர்களில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே யாழில் கைதானவர்கள் கனேடிய பிரஜை பெற்ற தமிழ் மக்கள் என தெரியவருகின்றது.

No comments