நெல்லியடியில் மோதல்; மூவர் கைது

பருத்தித்துறை நெல்லியடி ராஜாராமன் கிராம பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இளைஞர்கள் சிலர் கைக்கலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கைக்கலப்பில் ஈடுபட்டார்கள் எனும் குற்றசாட்டில் மூன்று இளைஞர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவருடைய உடமையில் இருந்து 10 கிராம் கஞ்சா போதை பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

No comments