பொங்கல் பானையே சின்னம்:சி.வி.விக்கினேஸ்வரன் அறிவிப்பு!
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் பொங்கல் பானை என்பதை பொங்கல் தினத்தில் விக்கினேஸ்வரன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் உலகம் வாழ் எனது இனிய தமிழ் உறவுகளுக்கு பொங்கல் பானை சார்பில் எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை உழவர் திருநாளாம் இன்று தெரிவித்துக்கொள்கின்றேன்.

மதம் குலம் நாடு கடந்து சகல தமிழ்ப் பேசும் உறவுகளுக்கும்; எனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பொங்கல் பானை தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் என்பதை நான் சொல்லி எனது இனிய உறவுகள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என விக்னேஸ்வரன் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

No comments