மீண்டும் மாகாண அதிகாரங்களை பறிக்க சதி?


மாகாணசபையினது அதிகாரங்களை சத்தம் சந்தடியின்றி தெற்கிற்கு தாரை வார்க்க வடக்கு வைத்தியர்கள் குழாம் களமிறங்கியுள்ளது.ஏற்கனவே மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் என தாரை வார்க்கும் முயற்சி மும்முரமாகியிருக்கின்ற நிலையில் தற்போது பாடசாலைகளை தாண்டி வடக்கின் 5 வைத்தியசாலைகளை விரைவில் மத்திய அரசுன் நேரடிக் கட்டுப்பாட்டுன் கீழ் கொண்டு செல்ல சுகாதார அமைச்சு நடவடுக்கை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

வடக்கு மாகாணத்துல் இயங்கும்; 119 வைத்தியசாலைகளில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மட்டுமே தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரேயொரு வைத்தியசாலையாகவுள்ள நிலையில் மேலும் 5 வைத்தியசாலைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

குறித்த விடயம் மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக தற்போதைய ஆளுநர் வரையில் குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இதில் வவுனியா , முல்லைத்தீவு , மன்னார் , கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்ட வைத்தியசாலைகளும் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையினையுமே மத்திய அரசுடன் இணைக்கும் யோசனை முன் வைக்கப்பட்டது.

இதே கோரிக்கை 2015ஆம் ஆண்டின் இறுதியில் முன்வைக்கப்பட்டு மாகாண சபையினால் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாகாணசபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்டமைப்பு இல்லாத நிலையில் மீண்டும் முயற்சி ஆரம்பித்துள்ளது.

No comments