அரசியல் கைதிகளிற்காக குரல் கொடுத்த தாய் மரணம்!


தமிழ் அரசியல் கைதிகளுக்காக குரல்கொடுத்த தவமணி உயிரிழந்தார்.
பொன்னாலையைச் சேர்ந்த இயற்கை மருத்துவிச்சி வேலையா தவமணி (வயது-73) கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இயற்கை மரணம் எய்தியுள்ளார்.
பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் முப்பது வருடங்களுக்கு மேலாகத் தொண்டுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இறக்கும் வரை அப்பணிகளைத் தொடர்ந்தார்.
மாணவர்களின் கல்வியில் அக்கறையுடன் செயற்பட்ட இவர் வெண்கரம் படிப்பகத்தின் கல்விச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கினார். சமூக சேவையில் ஈடுபாடுடைய இவர் தன்னார்வலராக முன்வந்து சரீரப் பணிகளை ஆற்றினார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய போராட்டத்தில் பங்கேற்று கைதிகளை விடுவிக்காவிட்டால் தீக்குளிப்பேன் என பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார். இவர் ஐந்து பிள்ளைகளின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments