நீராவியடி பொங்கல் இம்முறை அமைதியாக..!


முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழர் திருநாள் தைப்பொங்கல் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை அமைதியாக நடந்துள்ளது.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டிடமான நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றன.

தலமூர்த்திகளுக்கான அபிசேகத்துடன் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
பொங்கல் நிகழ்வு இடம்பெற்றபோது பாதுகாப்புக்காக இலங்கை காவல்துறையினர்; கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த ஆண்டு ஆலய சூழலில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வு அங்கு ஆக்கிரமித்து விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் குழப்பப்பட்டிருந்தது.
எனினும் அண்மையில் சர்ச்சைக்;குரிய பௌத்த பிக்கு புற்றுநோயால் உயிரிழந்திருந்த நிலையில் இம்முறை பொங்கல் நிகழ்வு அமைதியாக நடந்தேறியுள்ளது. 

No comments