நீதிபதி விவகாரம்:சபாநாயகர்-சட்டமா அதிபர் பேச்சு!


கோத்தாவின்   அழுத்தங்களையடுத்து பதவி நீக்கப்பட்டுள்ள நீதிபதிகள் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடலின் தொடர்ச்சியாகவே குறித்த பணி நீக்கம் நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments