தமிழ் தரப்புக்களது தவறே அரசியல் கைதி மரணம்?


சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த தெரியாத தமிழ் அரசியல் வாதிகளே அரசியல் கைதிகளின் ;நிலைக்கு காரணம்.நான் கூட அந்த கூட்டத்தில் ஒருவனாக பயணித்தவனே என்ற குற்ற மனவுணர்வு உண்டு என புதிய விளக்கமளித்துள்ளார் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரன்.

அரசியல் கைதி மகேந்திரனின் மரணம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் எம்மை நேசித்த நாம் நேசித்த உறவு முறக்கோட்டாஞ்சேனை செல்லப்பிள்ளை மகேந்திரன் அண்ணன் . கொழும்பு சிறையில் 2015.09.01 இருந்து அதிக தடவை நான் பார்வையிட்டேன். என்னால் முடிந்தவரை சில உதவிகளையே செய்ய முடிந்தது . 1993.03.27 கிழக்கு பல்கலைக்கழகம் முன்னால் கைது செய்யப்பட்டார். 18 வயது கைது செய்யப்படும் வேளை. ஆனால் 19 வயது ஆக குறிப்பிட்டு வழக்கு தொடர். பின் ஆயுள் தண்டனை . பின் மேல்முறையீடு. என்ன கடைசியாக பார்க்கும்போது காலில் பலத்த நீரழிவு காயத்துடன் காணப்பட்டார். உடனே அவருக்கான வைத்திய சேவையை ஆரம்பிக்க சிறை அதிகாரிகள் உடன் பேசினேன். அவரை மேலதிக வைத்திய சேவைக்காக சிறை வைத்தியசாலையை விட்டு , பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள் எனக் கூறினேன். அன்றைய தினமே வந்து நீதி அமைச்சர் உடன் கூட பேசினேன்.ஆம் என்றார்கள்.ஆனால் ...

உள்ளூர் முதல் சர்வதேசம் வரை அவரைப்பற்றிய விடயங்களை வெளிக்கொணர்ந்தேன். மகேந்திரன் அண்ணாவின் விடுதலை பற்றி பாராளுமன்றத்தில் பேசிய சந்தர்ப்பங்கள் அதிகம் . அவரைப் பற்றி நான் பேசாத ஊடகங்கள் இல்லை. எப்படியாவது வெளியே அவர் வர வேண்டும் என்பதில் அதிக ஆவலுடன் இருந்தேன். சக அரசியல் கைதிகள் கூட நான் அவர்களை பார்க்கப்போகும் சந்தர்ப்பங்களில் எல்லாம் " எல்லோருக்கும் முதல் வந்தவர். அவரை முதலில் வெளியே எடுங்கள் அண்ணா , தம்பி பாவம்" என்பார்கள் . என்ன செய்வது என்னால் முடிந்தவரை முயற்சித்தோம். 

இப்போது கொழும்பில் அவர்களது உடலை பெறுவதில்........ மற்றவர்களை பிழை சொல்வதை விட சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த தெரியாத தமிழ் அரசியல் வாதிகளே அரசியல் கைதிகளின் இந்நிலைக்கு காரணம் ! நான் கூட அந்த கூட்டத்தில் ஒருவனாக பயணித்தவனே என்ற குற்ற மனவுணர்வு உண்டு என தெரிவித்துள்ளார்.

No comments