யாழ்.விமான கட்டணம் ஒரு மாதத்தினுள் குறையும்?


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து செல்லும் விமானங்களிற்கு மட்டும் அறவிடப்படும் இரட்டிப்பு வரி பிரச்சினையை தீர்க்க புதிய அரசு சம்மதித்துள்ளது.எதிர்வரும் ஓருமாத காலத்திற்குள் அது நீக்கப்படும் என இலங்கையின் சிவில் விமான நிலைய அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா தெரிவித்துள்ளார்.

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக பயணிப்போருக்கு ஒரு விமான நிலையத்திற்கான வரி மட்டும் விதிக்கப்படும் நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைந்த்தின் ஊடாக பயணிக்கும் பயணிகளிற்கு மட்டும் இரு விமான நிலையங்களிற்கான வரி அறவிடுவது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது ஒரு பயணி எந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றாரோ அதற்கு வரி அறவிடப்படுவது சர்வதேச வழமை. ஆனால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைத்தில் மட்டும் குறித்த விமான நிலையத்திற்கான வரியுடன் நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையத்தின் வரியினையும் இணைத்து இரு விமான நிலையங்களிற்குமான வரி அறவிடப்படுகின்றமை தொடர்பில் விமான நிலையம் ஆரம்பித்தமை முதல் சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் கடந்த 2ம் திகதிய அமைச்சரவைக் கூட்டத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டதை தொடர்ந்தே எதிர்வரும் ஓருமாத காலத்திற்குள் அது நீக்கப்படும் என இலங்கையின் சிவில் விமான நிலைய அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா தெரிவித்துள்ளார்.


No comments