கோத்தா காலில் விழ தயார்: கூட்டமைப்பு!


கோத்தபாய கூட்டமைப்பினை ஒரு பொருட்டாக கொண்டிருக்காத போதும் அவருடன் டீல் முடிக்க கூட்டமைப்பினர் பலரும் முண்டியடித்துவருகின்றனர்.

அவ்வகையில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் புதிய ஐனாதிபதி கோட்டபாய ராஐகபக்சவுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கோத்தபாயவை பொறுத்தவரையில் இன்று அல்ல முன்னரிருந்தே தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் குறிப்பாக இனப்பிரச்சனை தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றார். இவ்வாறு தான் இவர் செயற்படுவார் என்று எதிர்பார்த்து தான் தமிழ் மக்கள் இவருக்கு வாக்களிக்கவில்லை. மிகப் பெரிய அளவில் சஐத்திற்கு வாக்களித்தனர்.

இருந்தாலும் இவர் இந்த நாட்டிற்கு ஐனாதிபதியாக வந்திருக்கின்றார். இந்த நாட்டின் அபிவிருத்தி பற்றி கதைக்கிறார். ஆகவே நாடு அபிவிருத்தி அடைய வேண்டுமாக இருந்தால் உண்மையில் தமிழ் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும். நாட்டில் ஒரு சுமுகமான நிலைமை ஏற்பட்டால் தான் வெளிநாடுகளும் முதலீடு செய்ய முன்வரும். அதனுர்டாக அபிவிருத்தி நோக்கி பயணிக்க முடியும்.

ஆகையினால் இன்றைக்கு ஐனாதிபதி இப்படி தான் சொல்கிறார் இப்படித் தான் இனியும் செயற்படப் போகிறார் என்பது எதிர்பார்ப்பாக இருந்தாலும் அதைக் குறித்து நாங்கள் எங்களது நடவடிக்கைகளை எடுக்காது இருக்கமுடியாது.ஆகவே எமது பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்குரிய நடவடிக்கைகளை தொடர்ந்தும் நாங்கள் முன்னெடுக்க வேண்டும்.

ஐனாதிபதி உட்பட ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் என்னதைத் தான் சொன்னாலும் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு என்பது அவசியமானது. அதற்காக நாங்கள் எங்களது செயற்பாடகளை முன்னெடுத்தக் கொண்டு தான் வருகின்றோம்.

குறிப்பாக இந்த விடயத்தில் ஐனாதிபதி வேறு நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வந்தாலும் இந்தஆட்சியில் இன்று பிரதமராக இருக்கின்ற அவருடைய சகோதரன் மகிந்த ராஐபக்ச கூட தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்து இந்தியா உட்பட பலருக்கும் சொல்லியுள்ளார்.

ஆகையினால் இன்றைக்கு ஐனாதிபதி எப்படிச் சொல்லியிருந்தாலும் நாங்கள் எங்களுடைய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். அதற்காக இந்த ஐனாதிபதி பிரச்சனைகளைத்  தீர்ப்பார் என்று நாங்கள் சொல்ல மாட்டோம. அவ்வாறு; தீர்ப்பார் என்றும் நம்பவில்லை.

ஆனாலும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்.

அடுத்த தேர்தலில் கூட்டமைப்பு பலமான அமைப்பாக உருவாகினால் சம பலத்துடன் நின்று பேசக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இதனடிப்படையில் ஐனாதிபதியுடன் பேச வேண்டுமென கட்சித் தலைவர் சம்மந்தர் ஐயா கேட்டிருக்கின்றார். ஆகவே வடகிழக்கு பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எங்களுடன் பேசத் தான் வேண்டும். பேசாமல் இங்குகிருந்து தனியாக எதனையும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கோத்தாவுடன் நெருங்கிய சகாவாக இருந்திருந்த சித்தார்த்தன் தேர்தலிற்கு முன்னதாக இரகசிய சந்திப்பொன்றை அவருடன் நடத்தி அம்பலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments