பாம்பு காய்ச்சல் : வட மாகாண மக்களுக்கு எச்சரிக்கை!


உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் "பாம்பு காய்ச்சல்" தொடர்பில் வடக்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி .ஜமுனானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவை தாக்கி அங்கு மக்களை உயிரெடுத்து வரும் கோரோனா வைரஸ்( பாம்பு காய்ச்சல்) தற்போது அமெரிக்கா, தாய்லாந்து, சவுதி உள்ளிட்ட நாடுகளுக்கும் தொற்றியுள்ளது.
எனவே வடக்கு மாகாணத்திலும் இந்த தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு விழிப்போடு இருக்கவேண்டும்"என மருத்துவர் சி. யமுனானந்தா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
தற்போது உலகம் முழுவதும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கோரோனா வைரஸ் (பாம்பு காய்ச்சல்) என்ற சுவாசத் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. இந்தக் காய்ச்சல் சீனாவில் பரவுகின்றது.

இந்த கோலயரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் அபாயம் உள்ளதால் உலக சுகாதார நிறுவனம் மிகவும் விழிப்பாக உள்ளது. இன்னும் அபாயக் கட்டத்தை எட்டவில்லை.
சீனாவில் இந்த வைரஸ் காரணமாக ஓர் மாகாணத்தைச் சேர்ந்த மக்களை வேறு மாகாணங்களுக்குச் செல்லாதவாறு கட்டுப்பாடுகளைப் போட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டால் வைத்தியசாலையில் முடங்கும் நிலை ஏற்படலாம். எனவே மயிலிட்டியுள்ள காசநோய் வைத்தியசாலையை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் சீரமைத்து வழங்கினால், அவசர நிலையை சமாளிக்க எனவும் மக்களை அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments