ஈரான் ஏவுகணை தாக்குதலில் 80 அமெரிக்க படையினர் பலி!

ஈராக்கின் அல் அசாத் மற்றும் எர்பில் பகுதிகளில் அமைந்துள்ள அமெரிக்க வான் தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் 80
அமொிக்கப் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

அத்துடன் குறித்த தாக்குதல்களில் அமெரிக்க உலங்கு வானூர்திகள் மற்றும் இராணுவ தளபாடங்கள் தேமடைந்ததாகவும், ஈரான் ஏவிய ஏவுகணைகளை எதுவும் இடைநடுவில் தடுக்கவில்லை என ஈரான் கூறியுள்ளது.

ஈரான் ஏவுவணைத் தாக்குதலை நடத்தியதை அமொிக்க அதிபரும், பென்டகனும் உறுதி செய்துள்ளது. ஆனால் தேச விபரங்களை இதுவரை அவர்கள் தெரிவிக்கவில்லை.

ஆனால், ஈரானின் தாக்குதலில் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் ஃபத்தே -110 பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தியுள்ளது ஈரான். குறித்த ஏவுகணைகள் 186 மைல் தொடக்கம் 300 கி.மீ. வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இந்த தாக்குதலுக்கு  'தியாகி சுலைமானி ' என்று பெயரிடப்பட்டு உள்ளது என ஈரான் கூறியுள்ளது.
ஈராக்கின் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை 01:45 மணி தொடக்கம் 02:15 மணி வரை 22 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது. (22: 45-23: 15 GMT வியாழக்கிழமை), ஈராக் இராணுவத்தின் கூட்டு நடவடிக்கைக் கட்டளை அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அல் ஆசாத் விமான தளத்தை நோக்கி பதினேழு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. அதில் இரண்டு ஹிட் நகருக்கு மேற்கே அருகிலுள்ள ஹிட்டன் பகுதியில் விழுந்து வெடிக்கவில்லை.

மற்றைய ஐந்து ஏவுகணைகளும் இர்பில் உள்ள சர்வதேச கூட்டுபடையணியின் தலைமையகத்தை நோக்கி ஏவப்பட்டுள்ளன.

No comments