பிரெக்சிட் வெளியேற்றம்! விற்பனைக்கு வந்தது புதிய நாணயங்கள்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முறைப்படி இன்று வெள்ளிக்கிழமை வெளியேறும் பிரித்தானியா அதனை வரலாற்றில் குறிக்கும் வகையில் புதிய தங்கத்திலான சிறப்புப் பதிப்புக்களைக் கொண்ட  50பி நாணயங்களை விற்பனைக்கு விட்டுள்ளது. 

ஒவ்வொரு 50பி நாணயமும்ப 995 பவுண்கள் பெறுமதி கொண்டவை. மட்டுப்படுத்தப்பட்ட சிறப்புப் பதிவாக 1500 நாணயங்கள் வலைத்தளத்தில் விற்பனைக்கு விடப்பட்டன. அவை அனைத்தும் குறுகிய நேர இடைவெளியில் விற்று முடிந்து விட்டன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயம் திகதி மற்றும் சொற்களால் பொறிக்கப்பட்டுள்ளது. அமைதி, செழிப்பு மற்றும் அனைத்து நாடுகளுடனான நட்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments