மறைந்தார் 40 ஆண்டு ஆட்சியாளர்! புதிய சுல்தானைத் தேடும் ஓமான்!

மத்திய கிழக்கில் அமைந்துள்ள ஓமான் நாட்டில் நீண்ட காலமாக ஆட்சி செய்து வந்து சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் காலமானார்.


79 வயதான சுல்தான் காபூஸ் சில மாதங்கள் உடல் நலக்குறைவால் பெல்ஜியம் நாட்டில் மருத்துவ சிகிற்சை பெற்று வந்தார். சிகிற்சையின் பின்னர் ஓமான் நாடு திரும்பி வாழ்ந்து வந்த நிலையில் வயது முதிர்வு மற்றும் உடலநலக்குறைவு காரணமாக அவரது உயிர் பிரிந்துள்ளது.

இவரது தந்தை சைத் பின் தைமூர் ஓமான் நாட்டை ஆட்சி செய்த போது 1970 ஆண்டு அவரின் ஆட்சியைக் கவிழ்த்து அரியாசனம் ஏறினார். 40 ஆண்டுகாலம் ஓமான் நாட்டை ஆட்சி செய்து வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் சென்றவர். இறுதிவரை திருமணம் செய்யாமல் இருந்தார். இதனால் அவருக்கு வாரிசு இல்லாததால் ஓமான் நாட்டை ஆள ஒருவரும் இல்லாத நிலையில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் ஒன்றுகூடி புதிய சுல்தானைத் தேர்வு செய்யவுள்ளனர்.

சுல்தான் காபூஸின் மறைவையொட்டி மூன்று நாள் துக்கத்தை கடைப்பிடிக்குமாறு ஓமான் நாடு அறிவித்துள்ளது.

No comments