இஸ்லாமிய அரசின் ஷஹ்ரான் தொடர்பு; குற்றப்பத்திரிகை

உயிர்த்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஷஹ்ரான் ஹஷிமுடன் தொடர்புகளை பேணியமைக்காக இந்தியாவில் கைது செய்யப்பட்ட கோயம்புத்தூர் தலைவர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக அந்நாட்டு பொலிஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகளின் கோயம்புத்தூர் தலைவராக கருதப்படும் மொஹமட் அசாருதீன் மற்றும் அவரது உதவியாளர் ஷெயிக் ஹிதயதுல்லாஹ் என்ற சந்தேகநபர் இருவருக்கு எதிராகவே குற்றவியல் சதி மற்றும் பயங்கராத குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறு நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் குறித்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து கோவையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின்போது மொஹமட் அசாருதீன் கைது செய்யப்பட்டார்.

No comments