வடக்கு பட்டதாரிகள் ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்

வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பதற்கு வடக்கு பட்டதாரிகள் தீர்மானித்துள்ளனர்.

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்று கூடல் யாழ்ப்பாணம்- ஆரியகுளம் பகுதியிலுள்ள முற்போக்கு வாலிபர் கழக மண்டபத்தில் இன்று (29) நடைபெற்றது.

வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாணத் தலைவர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்று கூடலில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்காண பட்டதாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வேலை வாய்ப்பை வழங்க வலியுறுத்தி, ஜனாதிபதிக்கும் மகஜரொன்றை கையளிப்பதென இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாவும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments