ராஜிதவை சிறைக்கு கொண்டு செல்வது ரத்து!


விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை தனியார் வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு மாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சி இரத்து செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து வருகை தந்த அம்பியூலன்ஸ் வண்டி திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று, ராஜித சேனாரத்ன தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தினம் முதல் தற்பொழுது வரையுள்ள நாட்களில் அவருக்கு என்னவகையான பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன என்பது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகளினால் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக அவரை சிறைக்கு கொண்டு செல்லவும் சிறை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் இறுதி நேரத்தில் அம்முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

No comments