ஆட்களை மாற்றும் கோத்தபாய?


முப்படைகளதும் காவல்துறையினதும் கட்டமைப்புக்களை தனக்கேற்ற வகையில் கோத்தபாய மாற்றிவருகின்ற நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கே.என்.ஜே. வெதசிங்க அவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக உயர் பொலிஸ் அதிகாரிகள் 51 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளில் இருந்து சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் வரையில் இவ்வாறு சேவை நிமித்தம் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குப் பொறுப்பான, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், ரவி செனவிரத்ன அடுத்த சில நாட்களில் ஒய்வு பெறவுள்ளார். இதேவேளை  பொலிஸ் அதிகாரிகள் 11 பேர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

No comments