மீண்டும் மீண்டும் ரணில்-சஜித் பேச்சு?


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் நாளை கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளைய தினம் (30) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நாளை காலை 11 மணிக்கு கட்சியின் தலைமையகமான சிறீகோத்தாவுக்கு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியாக நாடாளுமன்ற நடவடிக்கைளில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments