தூள் வீச்சு அஞ்சி ஓடிய வன்முறை குழு

தென்மராட்சி - கொடிகாமம், வெள்ளாம் போக்கட்டி பகுதியில் நேற்று (28) இரவு வன்முறையில் ஈடுபடச் சென்ற குழு ஒன்றை தூள் கரைத்து விரட்டியடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வீடு ஒன்றில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வுக்கு சென்ற குழு ஒன்று தம்மை ஏன் அழைக்கவில்லை என்று முரண்பட்டு விட்டு வெளியேறிச் சென்றுள்ளது.

பின்னர் வன்முறையில் ஈடுபடும் நோக்கில் குறித்த குழு மீண்டும் குறித்த வீட்டுக்கு சென்றுள்ளது. இதன்போது அங்கிருந்த பெண்கள் தூளை கரைத்து வீசுவதற்கு தயாரான போது குறித்த குழு தப்பியோடியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டது. பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து அவர்களை விசாரணையை முன்னெடுத்திருந்தனர்.

No comments