அமைப்பாளராக நிரோஷ்: துணை அமைப்பாளராக ஈசன்?தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாண மவட்ட அமைப்பாளராக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் உதவி மாவட்ட அமைப்பாளராக யாழ்ப்பாண மாவட்ட துணை மேயர் துரைராசா ஈசனும் தெரிவு செய்யப்பட்டனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவினை ஆட்சேபித்தும் அத் தலைமைக்குழுவின் முடிவுகளுக்கு எதிராகவும்  தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்டக்கிளையில் சச்சரவுகள் ஏற்பட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து கட்சியின் தலைமைக்குழு முடிவிற்கு எதிராகச் செயற்பட்டதாகத் தெரிவித்து தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர், உதவி அமைப்பாளர் உள்ளிட்டவர்களையும் கட்சித் தலைமை பொறுப்புக்களிலிருந்து இடைநிறுத்தியிருந்தது.

இந் நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் கட்சியின நிர்வாகக் குழுக்கூட்டம் இடம்பெற்றது. அந் நிர்வாகக் குழுக் கூட்டத்திலேயே அமைப்பாளராக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் துணை அமைப்பாளராக பிரதி மேயர் துரைராசா ஈசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.No comments