குளவி கொட்டியதில் 8 பேர் பாதிப்பு

தோட்டத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 14 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லிந்துலை, ஹென்போல்ட் தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகினர். இச்சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 6 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும், 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments