தொடர்ந்தும் தடை: சீற்றத்தில் தூதரகங்கள்?

சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணிற்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்க தொடர்ந்தும் இலங்கை அரசு மறுத்துவருகின்ற நிலையில் ராஜதந்திர வட்டாரங்களில் அது சர்ச்சையாகியுள்ளது. குறித்த பணியாளருக்கான தடை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 25 ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர் நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தடையை நீட்டிப்பதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி கடந்த 25 ஆம் திகதி தனது அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

அதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விடயங்களை முன்வைத்தனர்.

அதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி குறித்த அதிகாரி வாக்குமூலம் வழங்க வேண்டும் என சுவிஸ் தூதரகத்துக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதனிடையே நவம்பர் 25 ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி கடந்த 25 ஆம் திகதி தனது அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

அதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விடயங்களை முன்வைத்தனர்.

அதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி குறித்த அதிகாரி வாக்குமூலம் வழங்க வேண்டும் என சுவிஸ் தூதரகத்துக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே,  கடத்தப்பட்டதாக கூறப்படும் குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (08) இரவு முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

No comments