நிசாந்த குறித்து சிஐடி அதிகாரிகளிடம் விசாரணை

சிஐடி நிசாந்த சில்வா நாட்டை விட்டு சட்டவிரோதமாக சென்றமை தொடர்பில் முன்னாள் சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் சிஐடி ஏஎஸ்பி திஸ்ஸேராவிடம் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவு வாக்குமூலம் பெற்றுள்ளது.

இவர்களிடம் இன்றைய தினம் (09) விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவு வாக்குமூலம் பெற்றுள்ளது.

இதேவேளை சிஐடி நிசாந்த சில்வா நாட்டைவிட்டு தப்பி செல்வதற்கு முன்னதாக சிஐடி பணிப்பாளராக இருந்த ஷானி அபேசேகர இடம்மாற்றப்பட்டு காலி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அதேபோல நிசாந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், அவர் விசாரணை செய்த வழக்குகளின் முக்கிய விசாரணை அதிகாரியாக இருந்த திஸ்ஸேராவும் இடம்மாற்றப்பட்டு பொலிஸ் களப்பிரிவுக்கு மாற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments