கடத்தப்பட்ட ஊழியர் சார்புக் கோரிக்கைக்கு அனுமதி மறுத்த மன்று

அண்மையில் கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியருக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை 17ம் திகதி வரை நீடித்து கோட்டை நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த பெண் ஊழியர் சுகயீனமுற்றுள்ள நிலையில் எஞ்சிய வாக்கு மூலங்களை சிஐடியினர் சுவிஸ் தூதுவரின் இல்லத்துக்கு வருகை தந்து பதிவு செய்ய உத்தரவிடுமாறு அப் பெண்ணின் சட்டத்தரணி உபுல் குமரப்பெரும முன்வைத்த கோரிக்கை நீதிவானால் நிரகாரிக்கப்பட்டுள்ளது.

No comments