மோதித்தள்ளியது கார்; மூவர் படுகாயம்

வவுனியா - திருநாவற்குளம் பகுதியில் இன்று (12) இரவு இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் மற்றும் வீதியில் நின்றவர்கள் மீது கார் ஒன்று மோதியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments