Header Shelvazug

http://shelvazug.com/

கோத்தா பரிந்துரைத்தவர் மேன் முறையீட்டு நீதிபதியாகிறார்

மேல் நீதிமன்ற நீதிபதி எம்.டி.எஸ். அபேரத்னவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அரசியலமைப்பு சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எம்.டி.எஸ். அபேரத்னவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்திருந்த நிலையில், இன்று (12) அரசியலமைப்பு சபை கூடியது.

இதன்போதே எம்.டி.எஸ். அபேரத்னவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

No comments